தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஏர்டெலின் 30 கோடி பயனாளர்களின் தகவல் திருட்டு? - Airtel app latest news

சுமார் 30 கோடி ஏர்டெல் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போகும் ஆபத்திருந்தாக ஏர்டெல் நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது.

Airtel
Airtel

By

Published : Dec 8, 2019, 7:52 PM IST

ஏர்டெல் நிறுவனத்தின் செயலியில் இருந்த குறைபாடு காரணமாக, சுமார் 30 கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போகும் அபாயம் இருந்தது. இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏர்டெல் செயலியில் இருந்த இந்தக் குறைபாட்டை பெங்களூருவைச் சேர்ந்த எஹ்ராஸ் அகமது என்ற பொறியாளர் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஏர்டெல் செயலியில் இந்த குறைபாடு இருந்தது. இதன் மூலம் ஒரு ஏர்டெல் பயனாளரின் பெயர், பாலினம், இமெயில், பிறந்த நாள், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் அவர்கள் பயன்படுத்தும் மொபைல் குறித்த தகவல்களையும் யாராலும் எடுத்து கொள்ள முடியும்" என்றார்.

இந்த குறைபாடு ஏர்டெல் செயலியில் மட்டும் இருந்ததாகவும் ஏர்டெல் தளத்தில் இந்தக் குறைபாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் குறைபாடுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப் பெரியதாகும். சுமார் 3.25 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயத்திலிருந்தது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் இந்தக் குறைபாட்டை, விரைவில் நாங்கள் சரி செய்துகொண்டோம் என்றும்; இப்போது பயனாளர்களின் தகவல்கள் அனைத்தும் பத்திரமாக உள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தடம் புரளும் இந்திய ரயில்வே!

ABOUT THE AUTHOR

...view details