தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

பேஸ்புக்கை தொடர்ந்து, லிங்க்ட்இனிலும் 50 கோடி பயனர்களின் டேட்டா கசிவு! - பேஸ்புக் தகவல் கசிவு

டெல்லி: பேஸ்புக் தகவல் கசிவைத் தொடர்ந்து, லிங்க்ட்இன் செயலியிலும் 50 கோடி பயனர்களின் தரவுகள் இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LinkedIn
லிங்க்ட்இன்

By

Published : Apr 9, 2021, 12:28 PM IST

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வரும் பயனர்களில் சுமார் 53 கோடிக்கும் மேற்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் இணையத்தில் பகிர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், பயனர்களின் தொலைபேசி எண், பேஸ்புக் ஐடி, பிறந்த தேதி உள்ளிட்ட எண்ணற்ற தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கசிந்த பயனாளர் கணக்குகளில் பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் கணக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிர்ச்சியிலிருந்து பயனர்கள் மீள்வதற்குள், லிங்க்ட்இன் செயலியில் உள்ள 500 மில்லியன் (50 கோடி) பயனர்களின் கணக்குகளின் விவரங்கள், இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

சுமார் நான்கு ஃபைல்களில் இந்தத் தகவல்கள் பிரபல ஹேக்கர்ஸ் குழுவில் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், பயனர் பெயர், முகவரி, அலைபேசி எண், வேலை செய்யும் இடம், லிங்க்ட்இன் ஐடி ஆகியவையும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து லிங்க்ட்இன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விற்பனைக்கு வந்ததாகக் கூறப்படும் லிங்க்ட்இன் கணக்குகளின் தொகுப்பை ஆராய்ந்து வருகிறோம். ஹேக் செய்யப்பட்ட அனைத்து கணக்குகளும் யார் வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய பொது கணக்குகள் தான். தனிப்பட்ட கணக்குகளின் தரவுகள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை. ஹேக் செய்யப்பட்ட கணக்குகளின் விவரங்களை, வேறு யாராவது லிங்க்ட்இனில் உபயோகிக்க முயன்றால், அதனை எங்கள் குழுவினர் தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:அலிபாபா ஜாக்மாவை பின்னுக்குத் தள்ளிய அம்பானி: கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம்!

ABOUT THE AUTHOR

...view details