தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஜூம் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

பிரபல வீடியோ சாட் செயலியான ஜூம் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Additional security for Zoom Users
Additional security for Zoom Users

By

Published : Sep 12, 2020, 6:15 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாக தற்போது பெரும்பாலான கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றுவருகிறன.

இதற்கு பல வீடியோ சாட்டிங் செயலிகள் இருந்தாலும் ஜூம் செயலியைதான் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும், ஜூம் செயலியில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் அதை அரசின் முக்கிய கூட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரச சமீபத்தில் சுற்றிக்கை அனுப்பியிருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சில புதிய வசதிகளை ஜூம் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி தற்போது ஜூம் செயலியில் Two-Factor Authentication என்ற புதிய பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை ஜூம் செயலியில் சென்று ஆன் செய்து கொள்ளலாம் என்றும் இதன் மூலம் பயனாளர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜூம செயலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்றால் 2 வாரங்கள் தடை'

ABOUT THE AUTHOR

...view details