தமிழ்நாடு

tamil nadu

வாட்ஸ்அப் முடக்கத்தால் டெலிகிராமுக்கு தாவிய 7 கோடி பயனர்கள்

By

Published : Oct 7, 2021, 4:03 PM IST

பேஸ்புக், வாட்ஸ்அப் முடக்கத்தின் விளைவாக டெலிகிராம் செயலிக்கு புதிதாக 7 கோடி பயனர்கள் மாறியுள்ளதாக டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தெரிவித்தார்.

http://10.10.50.85//tamil-nadu/07-October-2021/whatsapp-vs-telegram_0710newsroom_1633602147_185.jpg
http://10.10.50.85//tamil-nadu/07-October-2021/whatsapp-vs-telegram_0710newsroom_1633602147_185.jpg

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அக்.4ஆம் தேதி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் தற்காலிகமாக முடங்கின. பல நாடுகளில் சேவை முடங்கியதால் பயனர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இந்த நிகழ்வு உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அக்டோபர் 5ஆம் தேதி அதிகாலை முதல் மூன்று செயலிகளும் மீண்டும் செயல்படத் தொடங்கின.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க், "ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகள் இப்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இடையூறுக்கு மன்னிக்கவும்” எனப் பதிவிட்டிருந்தார்.

டெலிகிராமுக்கு 7 கோடி புதிய பயனர்கள்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய, சில மணி நேரங்களிலேயே சுமார் 7 கோடி புதிய பயனர்கள் டெலிகிராமிற்கு மாறியுள்ளனர். இதுகுறித்து டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ், "எங்களது செயலியில் புதிதாக இணைந்துள்ள 7 கோடி பயனாளருக்கு சிறந்த முறையில் சேவைகளை அளித்து வருகிறோம்.

குறிப்பாக அமெரிக்காவில் அதிக அளவு பயனர்கள் புதிதாக இணைந்துள்ளனர். மிகக் குறைந்த நாள்களில் அதிக பயனாளர்கள் சேர்ந்ததால், டெலிகிராம் செயலின் வேகம் சற்று குறைந்துள்ளது. விரைவில் இது சரி செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

டெலிகிராம் செயலியை, ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் துரோவ், அவரது சகோதரர் நிக்கலோய் துரோவ் ஆகிய இருவரும் 2013ஆம் ஆண்டு லண்டனில் தொடங்கினர். தகவல்களை பரிமாறிக் கொள்ளும் சேவைகளை, இது அளிக்கிறது.

இதையும் படிங்க:சமூக வலைத்தளங்கள் தற்காலிக முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details