தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஒரே நாளில் 10 மில்லியன் பயனாளர்களைப் பெற்ற டிஸ்னி! - டிஸ்னி ஸ்ட்ரீமிங் சேவை

வாஷிங்டன்: டிஸ்னி தனது ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கிய ஒரே நாளில் 10 மில்லியன் பயனாளர்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.

Disney Plus

By

Published : Nov 17, 2019, 10:19 AM IST

தற்போது உலகிலுள்ள அனைத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் தங்களுக்கான ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கி வருகிறது. அதன்படி டிஸ்னி நிறுவனம் Disney+ எனப்படும், தனது ஸ்ட்ரீமிங் சேவையைக் கடந்த வாரம் தொடங்கியது.

இந்தச் சேவை தொடங்கப்பட்ட ஒரே நாளில் சுமார் 10 மில்லியன் பயனாளர்கள் Disney+ சேவையில் இணைந்துள்ளனர். டிஸ்னி தயாரிப்பில் வெளியாகும் படங்களுடன் நேஷனல் ஜியோகிராஃபிக், இ.எஸ்.பி.என் மற்றும் ஹுலு நிறுவனத்தின் நிகழ்ச்சிகளையும் Disney+ சேவையில் இணைபவர்கள் கண்டுகளிக்கலாம்.

இந்த நிகழ்வு டிஸ்னி நிறுவனத்தின் வரலாற்றில் மிக முக்கியமானது என்றும்; எதிர்பார்த்ததைவிட மிக அதிக அளவிலான மக்கள் Disney+ சேவையில் இணைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹாலிவுட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள டிஸ்னி, ஸ்ட்ரீமிங் சேவையில் களமிறங்கியுள்ளது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனமும் Apple+ என்று தனது ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பேஸ்புக் பே -அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது சமூக வலைதள கிங்மேக்கர்!

ABOUT THE AUTHOR

...view details