தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

’கிழிஞ்சத மட்டுமில்ல, வெட்டுனதையும் விப்போம்...’ ஜீன்ஸில் மற்றொரு புதுமை! - Slash' jeans that are 'diagonally

ஜீன்ஸ் பேண்ட்டில் புதுமைகளைப் புகுத்தி வரும் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், 'ஸ்லாஷ்' ஜீன்ஸ் என்ற பெயரில் ஆங்காங்கே கட் செய்த பேண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளன.

jeans
ஜீன்ஸ் பேண்ட்

By

Published : May 17, 2021, 3:20 PM IST

ஜீன்ஸ் பேண்ட், நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஆடையாக மாறிவிட்டது. ஆண்கள், பெண்கள் என பாலின பேதமின்றி யார் வேண்டுமானாலும் இதனை அணிந்து கொள்ளலாம். ஜீன்ஸ் பேண்ட்டின் அசுர விற்பனையைப் பார்த்த நிறுவனங்கள் புதுமையை பல விதமாகப் புகுத்தி வருகின்றன.

ஜீன்ஸ் வகைகள்

முதலில் லூஸ்ஃபிட் ஜீன்ஸ், ஸ்லிம்ஃபிட் ஜீன்ஸ், ரெகுலர் ஃபிட் ஜீன்ஸ், ஸ்கின்னி ஃபிட், நேரோ ஃபிட், ரிலாக்ஸ் ஃபிட் போன்ற வகைகள் அதிக அளவில் விற்பனையாகின.

நாளிடைவில் 2k கிட்ஸூக்காகவே, ஜீன்ஸ் பேண்ட்டில் விநோதத்தைக் கொண்டு வந்தனர் தயாரிப்பாளர்கள். ஆடை என்றாலே உடலை மறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்ற பிம்பமும் உடைத்தெறியப்பட்டது. ஜீன்ஸ் பேண்ட்டில் ஆங்காங்கே கிழித்துவிட்டு, அதனை டியர் ஜீன்ஸ் என விற்பனை செய்யத் தொடங்கினர்.

ஜீன்ஸ் பேஷன்

ஆரம்பத்தில் இதைலாமா வாங்குவார்களா என நினைத்த நிலையில், ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஹாயாக அணிந்து பொதுவெளியில் சுற்றத் தொடங்கினர். கிழிந்த ஜீன்ஸூக்கு எதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என நினைக்கும் நம்ம 90இஸ் கிட்ஸோ, சாதாரண ஜீன்ஸில் ஆங்காங்கே கிழித்துக் கொண்டு நாங்களும் போடுவோமென்று சுற்றத் தொடங்கினர்.

கிழிந்த ஜீன்ஸ் பேஷன்

மட் ஜீன்ஸ்

அழகான ஆடையை அணிந்து வந்த வழக்கத்தையே, நார்ட்ஸ்ட்ரோம் நிறுவனம் மொத்தமாக மாற்றி அமைத்தது. காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் ஒய்யாரமாக வேலை செய்யும் இளைஞர்களுக்காக, இந்த மட் ஜீன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அணியும்போது, உங்களைக் கடின உழைப்பாளி என மற்றவர்கள் நினைப்பார்கள் என்பது போல் மார்க்கெட்டிங் செய்தனர்.

மட் ஜீன்ஸ்

இந்த சேறு கறை படிந்த ஜீன்ஸ் பேண்ட்களை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டியதுதான் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது! மேலும், பல புதுமைகளை ஜீன்ஸ் பேண்ட்டில் கொண்டு வரவும் துண்டியது. இந்த மட் ஜீன்ஸ் பேண்ட் ஒரு ஜோடியின் விலை 425 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 31 ஆயிரம் ரூபாய்) ஆகும்.

இதற்கு மேலும், ஜீன்ஸ் பேண்ட்டில் புதுமை கொண்டு வர முடியாது எனப் பலரும் நினைத்த நிலையில், விநோத பேண்ட்டை லீஜி என்கிற தென் கோரியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்லாஷ் ஜீன்ஸ்

’ஃப்ரூட் நிஞ்சா’ கேமில் பழங்களைக் கட் செய்வது போல், ஜீன்ஸ் ஆடைகளை ஆங்காங்கே கட் செய்து ஸ்லாஷ் ஜீன்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பலரும் இதை ’சாமுராய் ஜூன்ஸ்’ எனவும் கூறுகின்றனர். இந்த ஜீன்ஸ் தயாரிப்பு, கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை ஓவர்டெக் செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஆண்கள், பெண்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் இதனை வடிவமைத்துள்ளனர். நிச்சயம் பேஷன் உலகில், இளைஞர்கள் மத்தியில் இது வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்லாஷ் ஜீன்ஸ்

இந்த சாமுராய் ஜூன்ஸின் விலை 528 அமெரிக்க டாலர் என (இந்திய மதிப்பில் 39 ஆயிரம் ரூபாய்) ஆன்லைன் வலைப்பக்கம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஜீன்ஸ் பேண்ட்டின் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்விட்டர்வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 11,000 லிட்டர் தண்ணீர் செலவு செய்யப்படுவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details