தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

பிரிட்டன் முன்னாள் பிரதமரை கிண்டலடிக்கும் இங்கிலாந்து ரோபோ! - Brexit means Brexit

லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரசா மேவை கிண்டடிக்கும் விதமாக உணவகத்தில் பரிமாறும் ரோபோவுக்கு தெரசா என பெயர்சூட்டி கிண்டலடித்துள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து

By

Published : Aug 3, 2019, 9:39 PM IST

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தெரசா மே, ‘பிரெக்ஸிட் மீன்ஸ் பிரெக்ஸிட், ஸ்ட்ராங் அண்ட் ஸ்டேபிள்' (Brexit means Brexit, its Strong and stable) என கூறிய வார்த்தைகளை மாற்றி (ப்ரேக்ஃபாஸ்ட் மீன்ஸ் ப்ராக்ஃபாஸ்ட், இட்ஸ் ஸ்ட்ராங் அண்ட் ஸ்டேபிள்) என உணவகத்தில் பரிமாறும் ரோபோ வாடிக்கையாளர்களிடம் கூறுவது இணையதளங்களில் வரைலாகி வருகிறது.

லண்டனின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ‘தி டெரேஸ் ரெஸ்டாரண்ட்’ எனும் உணவகத்தில் உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு ரோபோவின் உதவியோடு உணவுகள் பரிமாறப்பட்டு வருகிறது.

அந்த ரோபோ உணவுகள் பரிமாறுவதோடு, வாடிக்கையாளர்களிடம் முன்னாள் பிரதமர் தெரசா மே, பிரெக்ஸிட் பற்றி கூறிய வார்த்தைகளை கிண்டலடிக்கும் விதமாகக் கூறுவது வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரிட்டன் முன்னாள் பிரதமரை கிண்டலடிக்கும் இங்கிலாந்து ரோபோ

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு கருத்தரங்கம் ஒன்றில் முன்னாள் பிரதமர் தெரசா மே ஆடிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு, மேபாட் (maybot) என்ற பெயர் வைக்கப்பட்டது. இதனால் இந்த ரோபோவுக்கு தெரசா என பெயர் சூட்டப்பட்டுள்ளது என உணவகத்தின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ரோபோவை சீனாவைச் சேர்ந்த பிரபல ரோபோட்டிக் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் ரோபோக்கள் தான் அனைத்து வேலைக்கும் பயன்படப்போகிறது என்பதை அறிவுறுத்தும் விதமாக உணவக வேலைக்கு பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details