தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு - வீணாய்ப் போகும் குடிநீர்! - திருவாரூர் மாவட்டம்

திருவாரூர்: மன்னார்குடி வழியே கொள்ளிடம் - வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வாய்க்காலில் கலந்து வீணாகி வருகிறது.

Wasted drinking water
Wasted drinking water

By

Published : Jun 18, 2020, 8:12 PM IST

தமிழ்நாடு மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், அவை முறையாக கண்காணிக்கப்படாததால் அரசுக்கு நஷ்டமும், மக்களுக்கு உரிய உதவியும் கிடைக்காமல் போகிறது.

இந்நிலையில் மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் பல பகுதிகளிலும் பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. வீராணம் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்று கடல் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்கும் நோக்கத்தில், கொள்ளிடம் - வேதாரண்யம் பகுதியினருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

அந்த கூட்டுக் குடிநீர் திட்டம் ராட்சத குழாய்களில், அவ்வப்போது சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டும் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள செங்குந்தர் நகர்ப் பகுதியில், குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள நிலத்தில் கொள்ளிடம் - வேதாரண்யம் கூட்டுக்குடிநீர்திட்டத்திற்காகச் செல்லும் ராட்சத குழாயில், உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறுகின்றது.

மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால், அலுவலர்கள் கவனத்திற்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது. இதனால் கடந்த பல மாதங்களாக, பல லட்சம் லிட்டர் குடிநீர் வயல் பகுதி முழுவதும் பரவி, அருகில் உள்ள கால்வாயில் சென்று கலக்கிறது.

தற்போது பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விலைக்கு வாங்கிப் பருகி, வரும் சூழலில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்ட, கொள்ளிடம்-வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பை அலுவலர்கள் உடனடியாக சரி செய்து, தூய்மையான நீரை வழங்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details