மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார்.
மேலும், ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இயக்குகிறார்.