கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 2 லட்சத்து 66ஆயிரத்து 582 டிவிஎஸ் மோட்டர்ஸ் நிறுவன வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு (2020) நவம்பர் மாதத்தில் 3 லட்சத்து 22ஆயிரத்து 709 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதில் நிறுவனத்தின் பிரதான தயாரிப்பான இருசக்கர வாகன விற்பனை 25 சதவிகிதம் அதிகரித்து, 3லட்சத்து 11ஆயிரத்து 519 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
இதன் மூலம் உள்நாட்டு விற்பனை 30 சதவிகிதம் உயர்வு கண்டுள்ளது. அதுமட்டுமின்றி, மோட்டர் இருசக்கர வாகனங்களின் விற்பனை 26 சதவிகிதமும், ஸ்கூட்டர் விற்பனை 26 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும் அந்த நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை கடந்தாண்டு நவம்பரில் 35 சதவிகிதம் வரை சரிவைச் சந்தித்துள்ளது.