உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மஹா சனி பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார் கோயிலின் பெருநந்திக்கு எண்ணெய் மற்றும் ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் நடைபெற்றது.
ஆயிரம் லிட்டர் பாலால் உச்சி குளிர்ந்த நந்தியம் பெருமான்! - nandhi pooja in tanjore big temple
தஞ்சாவூர்: சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
nandhi pooja in tanjore big temple
பின்னர் நந்தியம் பெருமானுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஆலயத்தில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜைகள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்திற்கு பிறகு வரும் முதல் சனி பிரதோஷம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு நந்தியரை தரிசனம் செய்தனர்.