இத்தாலியில் உள்ள ரோம் நகரத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் வியாரீஜியோ என்ற கேளிக்கை திருவிழா (viareggio carnival) இந்தாண்டு நேற்றைய தினம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரத்யேக தலைப்பைக் கொண்டு அதன் அடிப்படையில் 'தீம்' உருவாக்கப்பட்டு நடத்தப்படும் அந்த கேளிக்கை திருவிழாவில் இந்த ஆண்டு, நெகிழி எப்படி கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்த விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.
கடலில் நெகிழி இதைத்தான் செய்யும்: பாடம் சொல்லும் திமிங்கலம்!
ரோம்: இத்தாலியில் நடைபெற்ற கேளிக்கை விழாவில், நெகிழி பயன்பாடு, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை பிரதிபலிக்கும் விதமாக பிரமாண்ட திமிங்கலம் ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
திமிங்கலம்
பலரும் அந்த தலைப்புக்கு சம்மந்தப்பட்ட வகையில் வேடமிட்டு வந்திருந்தனர், அதில் குறிப்பாக ராபர்டோ வன்னுச்சி (Roberto Vannucci) என்ற கலைஞர் மிக பெரிய ஒரு மிதக்கும் திமிங்கலத்தை உருவாக்கி அந்த திருவிழா பேரணியில் காட்சிப்படுத்தினார். அவர் உருவாக்கிய அந்த திமிங்கலத்தைக் கொண்டு, நெகிழி எப்படி திமிங்கலங்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது என்பதை உணர்த்தும் வகையில் வடிவமைத்திருந்தார்.