தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 3 - அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கலாமா

எந்த விதமான பிரார்த்தனைகளை செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது அட்சய திருதியையின் இந்த மூன்றாம் பாகம்.

அட்சய திருதியையின் வியக்க வைக்கும் அந்த விஷயம்: பாகம் 3!

By

Published : May 7, 2019, 12:32 PM IST

Updated : May 7, 2019, 1:08 PM IST

அட்சய திருதியையன்று நகைகள் வாங்குபவர்களின் மேலான கவனத்துக்கு... அட்சய திருதியையன்று எந்தமாதிரியான பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி காணலாம்.

  • அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.
  • மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
  • கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோயிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
  • தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
  • அட்சய திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய்ச்சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு கடன் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
  • வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களைத் தரும்.
  • மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்றுதான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
  • ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
  • அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
  • அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாகக் கருதப்படுகிறது.
  • அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
  • அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
  • அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
  • அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

நான்காவது பாகத்தில் மேலும் பல சுவாரஸ்ய தகவல்களைக் காணலாம்.

Last Updated : May 7, 2019, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details