திருவாரூர்:தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களில் குரு பெயர்ச்சி விழா இன்று (நவம்பர் 16) சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வெகு விமரிசையாக நடைபெற்ற ஆலங்குடி குருபெயர்ச்சி விழா! - ஆலங்குடி குருபெயர்ச்சி விழா
திருவாரூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாள் குருபெயர்ச்சி என்று அழைக்கபடுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் நன்மை பயக்கும் பலன்களை வாரி வழங்கும் குரு பகவான் வீற்றிருக்கும் ஸ்தலங்களில், பிரசித்திபெற்ற பரிகார ஸ்தலமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்துள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
வரலாறு சிறப்புமிக்க இக்கோயிலில் குரு பெயர்ச்சி விழா இன்று (நவம்பர் 16) வெகு விமரிசையாக நடைபெற்றது. குருபெயர்ச்சி நேரமான நேற்றிரவு 09.48 மணிக்கு குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். விசேஷ தீபாராதனையுடன் நடைபெற்ற இவ்விழாவில், ஆன்லைனில் பதிவு செய்திருந்த 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியவாறு கலந்துக்கொண்டனர்.