தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

திருமங்கலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - யோகா மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது! - 13 year old girl

மதுரை: திருமங்கலத்தில் யோகா பயிற்சி கற்றுக்கொள்ள வந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் யோகா மாஸ்டரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டத்தில் கைது!
சட்டத்தில் கைது!

By

Published : Nov 3, 2020, 9:40 AM IST

திருமங்கலம் - மதுரை சாலையில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன மடம் உள்ளது. இந்த தபோவனத்தின் ஒரு பகுதியை திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த குருநாதன்(64) என்பவர் வாடகைக்கு எடுத்து யோகா வகுப்பு நடத்தி வருகிறார். இதில் சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவருக்கு யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், ராமகிருஷ்ணா தபோவன மடத்தில் அதிகளவில் பள்ளி மாணவ, மாணவிகள் யோகா கற்று வருகின்றனர்.

இதையடுத்து திருமங்கலம் நகரைச் சேர்ந்த சிறுமி கடந்த இரண்டு வாரங்களாக யோகா பயிற்சி கற்றுக்கொண்டு வந்துள்ளார். நேற்று (நவ. 2) யோகா பயிற்சி முடித்து சிறுமி வீட்டுக்கு கிளம்பும்போது, யோகா மாஸ்டர் குருநாதன் சிறுமியை அவரது அலுவலக அறைக்குள் அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சிறுமி அவருடைய அம்மாவிடம் தெரிவித்த நிலையில், சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் யோகா மாஸ்டர் குருநாதனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details