தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்: தேடும் பணி தீவிரம்! - krishna water cabal

திருவள்ளூர்: கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை, சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்புத் துறையினர் தேடிவருகின்றனர்.

dsd
sds

By

Published : Nov 3, 2020, 2:50 PM IST

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் நியூ மாருதி டவுன் பகுதியைச் சேர்ந்த ஷேக் இப்ராஹிம் (19), நேற்று மாலை சத்தியமூர்த்தி நீர் பூண்டி ஏரியிலிருந்து வரும் கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் தனது இரண்டு நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். இதுமட்டுமின்றி பொதுப்பணித் துறை, காவல் துறையினரால் அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்த இடம் அருகே மூவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்

இந்நிலையில், நீச்சல் தெரியாத ஷேக் இப்ராஹிம் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது நண்பர்கள், உடனடியாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் இளைஞரைத் தேடும் முயற்சியில் களமிறங்கினர். சுமார் 25 கிலோமீட்டர் தூர கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் 18 மணி நேரங்களுக்கு மேலாக ஷேக் இப்ராஹிமை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புல்லரம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details