தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

உதவி ஆய்வாளரின் வாக்கி டாக்கியை திருடிய இளைஞர்! - சென்னை செய்திகள்

சென்னை: வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரின் வாக்கி டாக்கி, மதுபோதை பரிசோதனை கருவி உள்ளிட்டவற்றை திருடிய இளைஞர் ரோந்து காவலர்களிடம் சிக்கினார்.

arrest
arrest

By

Published : Feb 6, 2021, 7:17 PM IST

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையக் காவலர்கள் மதன்ராஜ், கோவிந்தசாமி ஆகிய இருவரும் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது கையில் இருந்த பையை வாங்கி பார்த்த போது, அதில் போக்குவரத்து காவலர்கள் பயன்படுத்தும் பணப்பரிவத்தனை இயந்திரம், மதுபோதை பரிசோதிக்கும் கருவி, மற்றும் வாக்கி டாக்கி பேட்டரி ஆகியவை இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், பிள்ளையார் கோவில் தெருவைச் சேரந்த ஹரிஹரன் (18) என்பதும், அடையாறு போக்குவரத்து உதவி ஆய்வாளர் லூயிஸ் நிக்கோலஸ் நேற்றிரவு தரமணி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவர் வைத்திருந்த பையை திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஹரிஹரனை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து வாக்கி டாக்கி பேட்டரி, மதுபோதை பரிசோதிக்கும் கருவி உட்பட அனைத்தையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை காட்டி மிரட்டிய மின்சார வாரிய ஊழியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details