கடந்த 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வழிபாட்டிற்காக சாலைகளில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு நடந்த விநாயகர் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
இளைஞரின் முகத்தில் பற்றி எரிந்த நெருப்பு! - அங்கு நடந்தது என்ன? - fire spread his face - vairal video
சென்னை: விநாயகர் ஊர்வலத்தில் தீயுடன் விளையாடிய இளைஞரின் முகத்தில் தீப்பற்றி எரிந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதில் இளைஞர்கள் சிலர் தீப்பந்தம் ஏந்தி வாயில் மண்ணெண்ணெய் வைத்தபடி தீயை ஊதிச் சென்றனர். அப்போது அங்கிருந்த மணிகண்டன் (29) என்பவர் வாயில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீயுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென தீ முகத்தில் பட்டு தீ முகம் முழுவதும் எரியத் துவங்கியது.
இதனை பார்த்து கொண்டு இருந்த அவரது நண்பர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர் சட்டையை கழற்றி முகத்தில் வைத்து தீயை அனைத்து உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மணிகண்டன் தீயுடன் விளையாடி முகம் தீப்பற்றி எரியும் காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.