தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு...! - கார் டிரைவர் பலி

சென்னை: எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

youth
youth

By

Published : Feb 4, 2020, 1:28 PM IST

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் - சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு இடையே 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு சடலமாக கிடப்பதாக, எழும்பூர் ரயில் நிலைய காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கோயம்பேடு சேமாத்தம்மன் நகரைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரது மகன் டோமினிக் சாவியோ என்பதும், இவர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரிய வந்தது. மேலும், கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு டோமினிக் சாவியோ இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இரண்டு மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details