பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டின் அருகே வசித்துவருபவர் ரமேஷ். இருவரும், டாடா ஏஸ் வாகனம் வைத்து தொழில் செய்து வருகின்றனர்.
இருவருக்கும் இடையில் தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (நவ.26) இரவு ரமேஷ் தனது வாகனம் பழுதாகி இருப்பதாகவும், அதனால் மணிகண்டனிடம் உனது வாகனத்தை எடுத்துக் கொண்டு வா என்று ரமேஷ் கூறியுள்ளார். அப்போது மணிகண்டன் தனது வாகனமும் பழுதாகி இருப்பதாகக் கூறியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.