நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா கொழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் மேனன்(21) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி மற்றும் காவலர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.