திருவண்ணாமலை மாவட்டம் கொத்தந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் -மல்லிகா தம்பதியின் மகன் பிரசாந்த் (25). இவர், பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் -சரோஜா தம்பதியின் மகளான 14 வயது சிறுமியை செப்.31ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
பிரசாந்த் சிறுமியை குழந்தை திருமணம் செய்துகொண்டது தொடர்பாக, சைல்டு லைன் அலுவலர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் புகாரளித்தார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட மகளிர் காவல் துறையினர் பிரசாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்த பிரசாந்தின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ' என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் என்று திருவண்ணாமலை முழுவதும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சிறப்பாக செயல்படுத்தி சிறப்பு விருதும் பெற்றிருக்கிறார். குழந்தைத் திருமணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்றங்கள் தொடர்வது வேதனையளிக்கிறது.
இதையும் படிங்க:அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சேஃப் மூவ்?