தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

காதலாக மாறிய நட்பு - சிறுமியை அழைத்துச் சென்றவர் மீது பாய்ந்தது போக்சோ! - coimbatore pocso arrest

பொள்ளாச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகன் தினேஷ், தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்துவந்தார். இவர் 16 வயது சிறுமியை ஆசைவார்த்தைக் கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

youth arrested in posco for taking minor girl with him in coimbatore
youth arrested in posco for taking minor girl with him in coimbatore

By

Published : Dec 18, 2020, 8:10 AM IST

கோயம்புத்தூர்:சிறுமியை ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச் சென்ற நபரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகன் தினேஷ், தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்துவந்தார். இதற்கிடையில், தினேஷுக்கு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இவ்வேளையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி, தினேஷ் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் பொள்ளாச்சி வட்டம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியைத் தேடிவந்தனர்.

அப்போது கோபாலபுரம் அருகே பதுங்கியிருந்த தினேஷை காவல் துறையினர் கைதுசெய்தனர். விசாரணையில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details