தமிழ்நாடு

tamil nadu

தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது

By

Published : Dec 14, 2019, 3:22 PM IST

சென்னை: தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

youth-arrested
youth-arrested

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை சீனிவாசநகரைச் சேர்ந்த மணிகண்டன் தனது வீட்டில் கடந்த 6ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளைக்கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பீர்க்கன்காரணை வேல்நகர் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபரை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் பெயர் மகபுல் பாஷா (21) என்பதும், பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது

மேலும் தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து கொள்ளையடித்ததையும் ஒப்புக் கொண்டார். அதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் இருந்து 12 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சேலையூரிலும் ஒரு வீட்டில் மூன்றறை சவரனும், பீர்க்கன்காரணையில் ஒரு வீட்டில் 2 சவரனும் கொள்ளையடித்துள்ளார். மேலும், சிட்லபாக்கத்தில் 2 சவரன் நகையை வழிப்பறி செய்துள்ளதை ஒப்புகொண்டதை அடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க...

லாட்டரி சீட்டு விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details