நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு சேனாதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (29). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மணிகண்டன், செல்வகுமாரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முன்பகையால் கட்டையால் அடித்து கொலை - இளைஞர் கைது - கட்டையால் தாக்கி கொலை
நாகை: வேதாரண்யம் அருகே முன்பகை காரணமாக இளைஞரை கட்டையால் தாக்கி கொலை செய்த மற்றோரு இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வகுமார் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வாய்மேடு காவல் துறையினர் மணிகண்டனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: முன்பகை காரணமாக நண்பர் மீது தாக்குதல்; சிசிடிவி காட்சி வெளியீடு