ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மாரி செல்வம் (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனிடையே, கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறிய மாரி செல்வம், அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
கல்லூரி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது! - போக்சோவில் இளைஞர் கைது
ராமநாதபுரம்: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
sexually-assaulting
இந்நிலையில், 7 மாதம் கர்ப்பிணியான அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மாரி செல்வம், கருவை கலைக்க வேண்டும் என்று மாணவியிடம் கூறியுள்ளார். இது குறித்து, கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் திலகராணி, போக்சோ சட்டத்தின் கீழ் மாரி செல்வத்தை கைது செய்தார்.