தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வரதராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் (32). கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆபாச படங்களைக் காட்டி, பள்ளிக்குச் செல்லும் போது அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
7ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோவில் கைது! - இளைஞர் போக்சோவில் கைது
தேனி: ஆண்டிபட்டி அருகே 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Youth arrested for Sexual harassment on school student
இதனையடுத்து சிறுமியின் தந்தை ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த பவுன்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:அரசு பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகார் - கல்வித்துறை அலுவலர்கள் விசாரணை!
TAGGED:
இளைஞர் போக்சோவில் கைது