தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

முன்பணம் வாங்கிவிட்டு மீன்தொழிலுக்கு செல்லாத இளைஞர் கொலை? காவல் துறை விசாரணை!

கன்னியாகுமரி: கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக முன்பணம் வாங்கிவிட்டு மீன்பிடி தொழிலுக்கு செல்லாததால் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்பணம் வாங்கிவிட்டு மீன்தொழிலுக்கு செல்லாத இளைஞர் கொலை? காவல் துறை விசாரணை!
முன்பணம் வாங்கிவிட்டு மீன்தொழிலுக்கு செல்லாத இளைஞர் கொலை? காவல் துறை விசாரணை!

By

Published : Jul 23, 2020, 9:22 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தைச் சேர்ந்த ரதீஷ்டன் (36) என்பவர் கன்னியாகுமரி அருகே உள்ள குண்டலில் வசித்துவருகிறார். இருந்தபோதிலும் இவர் கோவளத்தைச் சேர்ந்த நிர்மல், வசந்த் ஆகியோருடன் மீன்பிடி தொழிலுக்கு சென்றுவந்துள்ளார்.

சில நாள்களாக இவர்கள் மூவரும் பணிபுரியும் விசைப்படகு உரிமையாளரிடம் வேலைக்கு செல்வதற்காக முன்பணம் வாங்கிவிட்டு தொழிலுக்குச் செல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மூன்று பேரும் வடக்கு குண்டல் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த போது, இது குறித்து கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ரதீஷ்டன் கீழே விழுந்துள்ளார். இதனால் மற்ற இருவரும் இவர் மதுபோதையில் கிடப்பதாக நினைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 22) காலை பார்த்தபோது, ரதிஷ்டன் சம்பவ இடத்திலேயே சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து கன்னியாகுமரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் கன்னியாகுமரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதில் சம்பந்தப்பட்ட நிர்மல், வசந்த் இருவரை கைது செய்துள்ள காவல் துறையினர், இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...மதுபோதையில் காவலரை தாக்கிய 4 மின்வாரிய ஊழியர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details