கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு! - நெல்லை செய்திகள்
நெல்லை: கூடங்குளம் அருகே பெருமணல் கடலில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மகன் காட்வின். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் நேற்று (மே 31) மதியம் கடலில் குளிக்க சென்றுள்ளார். 5 பேரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அலையின் சீற்றம் அதிகமானதால் 5 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 4 பேர் கரை வந்து சேர்ந்தனர். காட்வின் மட்டும் கரைக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த பெருமணல் இடிந்தகரை மீனவர்கள் படகில் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் காட்வினை கண்டுபிடிக்க முடியவில்லை.