தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது! - Crime news

விழுப்புரம்: 16 வயது சிறுமிடம் ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துவந்த இளைஞரை, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இளைஞர் போக்சோவில் கைது
Youngster arrest

By

Published : Dec 29, 2020, 6:47 PM IST

விழுப்புரம் அடுத்த சிறுவானூர் பழைய காலனி பகுதியைச் சார்ந்த லாரி ஓட்டுநரான புஷ்பராஜ், அதே பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் இளைஞர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ளவதாக ஆசை வார்த்தைக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் நான்கு தினங்களுக்கு முன் உடல் நிலம் சரியில்லாததால் சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் அனுமதித்தனர்.

அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமியின் தாயார் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், லாரி ஓட்டுநர் புஷ்ப ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இன்ஸ்பெக்டர் என்னை டார்ச்சர் பண்றாரு' - பெண் காவலர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details