விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இ.எஸ் தனியார் பள்ளியில் நேற்று (செப் 23) 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கான தனித்தேர்வு நடைப்பெற்றது. இதில் புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் (34) என்பவருக்கு பதிலாக, அதே பகுதியை சேர்ந்த பொறியியல் மாணவர் கிஷோர் (19) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளார்.
அவரை பிடித்து மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் ஏற்கனவே தமிழ், ஆங்கில தேர்வையும் எழுதியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கிஷோர் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட கல்வி அலுவலர் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு - ஆள்மாறாட்டம் செய்த மாணவர் கைது! - மாவட்ட கல்வி அலுவலர்
விழுப்புரம்: பத்தாம் வகுப்பு தனித்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர் கைது