தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பெண்களின்  தனிமையை பணமாக மாற்றிய குமரி இளைஞர் கைது! - நாகர்கோவில் செய்திகள்

கன்னியாகுமரி: பல பெண்களை ஏமாற்றி தனிமையிலிருந்த புகைப்படங்களை வைத்து பணம் பறித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

்ே்
்ே

By

Published : Apr 25, 2020, 11:49 AM IST

Updated : Apr 25, 2020, 3:23 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி (26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் காசி, பல பெண்களை தொடர்புகொண்டு பேசியுள்ளார். பேச்சில் மயக்கி தனிமையில் அவர்களுடன் பழகும் தருணங்களை அவர்களுக்கே தெரியாமல் முதலில் படம்பிடித்தார்.

பெண்களிடம் பணம் பறித்த குமரி இளைஞர் கைது

இதையடுத்து, ரகசியமாக படம் பிடிக்கபட்ட புகைப்படங்கள், காணொலிகளை வைத்து பெண்களுடன் பேரம் பேச தொடங்கினார்.

இதற்கு பெண்கள் சம்மதிக்கவில்லையென்றால் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பரப்பிவிடுவேன் என்ற காசியின் மிரட்டலுக்கு பயப்படும் பெண்களோ, லட்சக்கணக்கில் பணத்தை வழங்கிவந்துள்ளனர்.

ஆனால், இதையே முழு நேர வேலையாக வைத்திருந்த காசியை சிக்க வைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர். இவரிடமும் காசி தனது காதல் விளையாட்டை தொடங்கியுள்ளார். திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்பதை நம்பி தன்னையும் மறந்து தனிமையில் இருந்த பெண் மருத்தவரை, வழக்கம்போலவே படம் பிடித்து அதைவைத்து மிரட்டி பணம் கறந்துள்ளார். அதோடு நிறுத்தாமல், மருத்துவர் வசதியானவர் என்பதால் அவரிடம் தொடர்ந்து பணம் கேட்டு நச்சரித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் காசியின் மிரட்டலுக்கு பணியாத பெண் மருத்துவர், நேரடியாக நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின் அடிப்படையில் காசியை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை - வடமாநில இளைஞர் கைது

Last Updated : Apr 25, 2020, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details