சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமி டிசம்பர் 12ஆம் தேதி முதல் காணவில்லை என அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாயார் புகார் அளித்தார். அதன் பேரில், மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - போக்சோவில் இளைஞர் கைது - சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்
சென்னை: தியாகராய நகரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
sexual-harassment
இந்நிலையில், கேகே நகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாலகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.