விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி தைக்கா தெருப்பகுதியில் குடிபோதையிலிருந்த இரண்டு இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால், கோபமடைந்த அப்பகுதி மக்கள் இருவரையும் விரட்டியடித்தனர்.
போதை தெளிந்த நிலையில், இருவரும் கூமாப்பட்டி தைக்கா தெருமக்களை பழிவாங்க நினைத்து, ஜலால் என்பவரது தேநீர் கடைக்குத் தீவைத்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் வேட்டியால் முகத்தை மூடிக்கொண்டு இந்தத் தீய செயலில் ஈடுபட்டனர்.
பின்னர் ஒருவர் அவ்வழியாக வருவதைக் கண்டதும் இருவரும் தப்பியோடினர். இதனையடுத்து உடனடியாகத் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தேநீர் கடைக்குத் தீவைக்கும் நபர்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வுசெய்தனர். அதில் இரண்டு இளைஞர்கள் தேநீர் கடைக்குத் தீவைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், தீவைத்த இருவரையும் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:மதுரையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!