தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

75 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு வலைவீச்சு! - police investigation

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே 75 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

police station
police station

By

Published : Dec 4, 2020, 6:41 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நம்பியமுத்தூர் பகுதியில் கணவரை இழந்த 75 வயது மூதாட்டி ஒருவர் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் வசித்துவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்ற இளைஞர் நேற்று முன்தினம் (டிச. 02) தனியாக இருந்த மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

உடனே மூதாட்டி கூச்சல் போடவும் பக்கத்து தோட்டத்தில் இருந்த நபர்கள் வெள்ளிங்கிரியைப் பிடிக்கச் சென்றபோது தப்பித்துச் சென்று தலைமறைவானார்.

இதையடுத்து கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், காவல் துறையினர் தலைமறைவான வெள்ளிங்கிரியைத் தேடிவருகின்றனர். தற்போது மூதாட்டி பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க: இளம்பெண்ணுடன் தனிமையிலிருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர்: மிரட்டிப் பணம் பறித்த இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details