சவுகார்பேட்டையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய் மற்றும் மகன் ஷீத்தல் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இதில், குடும்பத்தகராறு காரணமாக ஷீத்தலின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதர்களான விலாஷ், கைலாஷ், ராஜீவ் ஷிண்டே, விஜய் உத்தம், ரவீந்திர நாத்கர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.
இதனையடுத்து 6 பேரையும் டெல்லி, பூனே என இரண்டு மாநிலங்களில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் துப்பாக்கி கொடுத்து உதவியதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜீவ் துபே என்பவரும் கைது செய்யப்பட்டார்.