தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

திருமணத்துக்கு மறுத்த இளைஞர் மீது திராவகம் வீசிய காதலி! - ஆந்திரா திராவகம் வீச்சு

திருமணத்துக்கு மறுத்த இளைஞர் மீது முதல் காதலி திராவகம் வீசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Young lady attacks her lover with acid! acid attack Crime abusive relations Woman Boyfriend Marry Acid Kurnool district Nandyala காதலன் மீது திராவகம் வீசிய காதலி ஆந்திரா திராவகம் வீச்சு இளைஞர் மீது திராவகம் வீச்சு
Young lady attacks her lover with acid! acid attack Crime abusive relations Woman Boyfriend Marry Acid Kurnool district Nandyala காதலன் மீது திராவகம் வீசிய காதலி ஆந்திரா திராவகம் வீச்சு இளைஞர் மீது திராவகம் வீச்சு

By

Published : Sep 4, 2020, 9:36 PM IST

கர்னூல்: ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகேந்திரா. இவர் பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்யாமல், மற்றொரு பெண்ணுடன் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முதல் காதலி, இது பற்றி நாகேந்திராவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அலட்சியமாக பதில் அளித்துவிட்டார். மேலும் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் நாகேந்திரா தனது இரண்டாவது காதலியுடன் மாயமாகியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகேந்திராவின் முதல் காதலி அவர் மீது திராவகத்தை (ஆசிட்) வீசியதாக தெரியவருகிறது.

திருமணத்துக்கு மறுத்த இளைஞர் மீது திராவகம் வீசிய காதலி!

இதில் நாகேந்திராவின் முகம் கருகியது. இது குறித்து கர்னூல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், நாகேந்திராவை தாக்க முதல் காதலி ஏற்கனவே ஒருமுறை முயற்சித்துள்ளார் என்ற தகவலும் விசாரணையில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:வாயில் திராவகம் ஊற்றி மனைவியை கொன்ற இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details