குஜராத் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர், ஏழு கிணறு பகுதியில் மின்விளக்கு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் தனது 20 வயது மனைவியுடன் வியாசர்பாடியில் வசித்து வருகிறார்.
நேற்று அவர் வழக்கம் போல் கடைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீடு வீடாக சென்று மிக்ஸி விற்பனை செய்யும் வடமாநில இளைஞர் ஒருவர், இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதையறிந்து திடீரென்று வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
பின்னர் அப்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி, பாலியல் வன்புணர்வு செய்த அந்த இளைஞர், நாளைக்கு மீண்டும் வருவேன் என்றும் கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அப்பெண்ணின் கணவர், மனைவியின் நிலையை பார்த்து அதிர்ந்துள்ளார்.