தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

'பிகாரில் பெண் எரித்து கொல்லப்பட்டதை நிதிஷ் குமார் மறைத்துவிட்டார்'- ராகுல் காந்தி - ராகுல் காந்தி

பிகாரில் உயிருடன் பெண் எரித்து கொல்லப்பட்டதை நிதிஷ் குமார் தனது தேர்தல் லாபத்துக்காக மறைத்துவிட்டார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Rahul Gandhi NDA government Woman burnt alive in Bihar பிகாரில் பெண் எரித்துக்கொலை ராகுல் காந்தி நிதிஷ் குமார்
Rahul Gandhi NDA government Woman burnt alive in Bihar பிகாரில் பெண் எரித்துக்கொலை ராகுல் காந்தி நிதிஷ் குமார்

By

Published : Nov 17, 2020, 2:23 PM IST

டெல்லி: தன்னுடைய தேர்தல் லாபத்துக்காக பிகாரில் பெண் ஒருவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டதை தேசிய ஜனநாயக கூட்டணி, நிதிஷ் குமார் மறைத்துவிட்டனர் என செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக ட்விட்டரில் நாளேடு செய்தி ஒன்றை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, “வைஷாலி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் உயிருடன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெண் மருத்துவமனையில் 15 நாள்கள் உயிருக்கு போராடி மரணித்துள்ளார். ஆபத்தான குற்றம் எது தெரியுமா? இந்த மனிதாபிமானமற்ற செயலை யார் செய்தார்கள்? அல்லது தேர்தல் லாபங்களுக்காக யார் அதை மறைத்தார்கள்? இந்தத் தவறு மீறு நல்லாட்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளார் நிதிஷ் குமார்” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

பிகாரில் உயிரிழந்த பெண் குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. அப்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி, தீ வைத்து எரித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'உ.பி.யில் ஆறு வயது சிறுமி கொடூரக் கொலை'- தம்பதி உள்பட நால்வர் கைது

ABOUT THE AUTHOR

...view details