சாம்லி (உத்தரப் பிரதேசம்): உத்தரப் பிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில் இளம்பெண் மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் என்று புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஜிங்ஹானா காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரும், இளம்பெண்ணை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அப்பெண்ணை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
உத்தரப் பிரதேசம்; இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்துவருவதாக சாம்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நித்யானந்த் ராய் கூறினார். வழக்கு குறித்து நித்யானந்த் ராய் கூறுகையில், “பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்” என்றார்.
இது குறித்து வெளியான மற்றொரு தகவலின்படி, “பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரின் குடும்பத்துக்கும் இடையே ஏற்கனவே நிலம் தொடர்பான தகராறு இருந்துள்ளது. இந்தத் தகராறு காரணமாக இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கலாம்” எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'உ.பி.யில் ஆறு வயது சிறுமி கொடூரக் கொலை'- தம்பதி உள்பட நால்வர் கைது