தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கொள்ளை நாடகமாடிய ஆடம்பர மனைவி! - விசாரணையில் அம்பலம்! - Wife who spends lavishly and plays

மதுரை: வெளிநாட்டிலிருந்து கணவர் சம்பாதித்து அனுப்பிய பணத்தை ஆடம்பரமாக செலவழித்து விட்டு, பணம் அனைத்தும் கொள்ளை போனது போல் மனைவி நாடகமாடியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

polic station
polic station

By

Published : Nov 7, 2020, 8:28 AM IST

மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அல்லாபிச்சை. இவர் கடந்த 4ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 6 சவரன் நகையை திருடிச் சென்றதாக புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை அல்லாபிச்சையின் மனைவி மூமினா பானு ஆடம்பரமாக செலவழித்துள்ளார். ஊர் திரும்பிய கணவர் வேலை பார்த்து அனுப்பிய பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 4ஆம் தேதி இரவு கணவர் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பீரோ மற்றும் கதவை திறந்து வைத்த மூமினா பானு, துணிகளை கலைத்துவிட்டு வீட்டில் கொள்ளை அரங்கேறியது போல நாடகமாடியுள்ளார்.

இதனையடுத்து, பொய்யான புகார் கொடுத்து காவல்துறையின் நேரத்தை வீணடித்த குற்றத்திற்காக அல்லாபிச்சை, அவரது மனைவி மூமினா பானு ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:மநீம-வைக் கண்டு பயப்படும் அதிமுக- டாக்டர் மகேந்திரன்

ABOUT THE AUTHOR

...view details