சென்னை: கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் கல்வி கூடங்கள், நிறுவனங்கள் என அனைத்துமே மூடப்பட்டன. பொதுமக்களும் வீட்டிலேயே முடங்கினர். இதனைப் பயன்படுத்தி கொண்ட மோசடி கும்பல் குறைந்த வட்டிக்கு லோன் தருவதாகவும், இ.எம்.ஐ கட்ட தேவையில்லை எனவும் பொதுமக்களை தொடர்புக்கொண்டு ஆசை வார்த்தைகள் கூறி லட்சக் கணக்கில் கொள்ளையடித்து வந்தனர்.
இதற்கு மாறாக ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் ஆன்லைனில் லோன் கொடுத்து கோடி கணக்கில் கொள்ளையடித்து வந்துள்ளனர். இது குறித்து, வேங்கை வாசல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் தன்னை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் உடனடியாக லோன் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி எம். ரூபி என்ற லோன் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வைத்தார்.
தகவல்கள் திருட்டு
அந்தச் செயலியை இன்ஸ்டால் செய்து அலோவ் என்ற பட்டனை அழுத்தியவுடன் ரூ.5,000 வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் எனக் காண்பித்தது. இதனால் 5000 ரூபாயை கடனாக பெற்றேன். இதையடுத்து, ரூ.1,500ஐ வட்டியாக கழித்துக்கொண்டு ரூ.3,500ஐ கொடுத்தனர். மேலும் ஒரு வாரத்தில் ரூ.5,000 கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை தராததால் கணேசனுக்கு தொடர்ந்து செல்போன் செய்து தொந்தரவு கொடுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டலும் கொடுத்து வந்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் கணேசனின் செல்போனில் உள்ள அந்தரங்க தகவல்களை திருடி பரப்பி விட்டு கடனை கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதனால் கணேசன் வேறு வழியில்லாமல் மத்திய குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளித்துள்ளார்.
பெங்களூருவில் கால்சென்டர்
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் 110 ஊழியர்களை வைத்து True kindle technology pvt ltd என்ற பெயரில் கால் சென்டர் போல் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், சீன நாட்டை சேர்ந்த சியா யமோவ், யூ யுவ்ன்லூன் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த பிரமோதா, பவான் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த விசாரணையில் சீனாவை சேர்ந்த ஹாங்க் என்பவர் 40க்கும் மேற்பட்ட லோன் செயலியை தயாரித்து முதலீடு செய்து பெங்களூருவில் கால் சென்டர் போல் நடத்தி வருவது தெரியவந்தது. மேலும் வாடிக்கையாளர்கள் பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் தகவல்களை திருட 46 சாப்ட்வேர்களை பயன்படுத்தி உள்ளனர். இதுதவிர மிரட்டி ஆபாசமாக பேசி பணத்தை பறிக்க ஊழியர்களை வைத்திருப்பது தெரியவந்தது. இவ்வாறு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஆன்லைன் லோன் வழங்கி பல கோடி ரூபாய் வரை மிரட்டி வட்டியாக பெற்றுள்ளது தெரியவந்தது.
ரா அலுவலர்கள் விசாரணை