சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நேற்று (டிச.11) அவரது கணவர் ஹேம்நாத், அவரது தந்தை ரவிச்சந்திரன், சித்ரா கடைசியாக கலந்துகொண்ட படப்பிடிப்பின் இயக்குனர்கள், தயாரிப்பாளர் என அனைவரிடமும் அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்தியன் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை செய்தார்.
விசாரணையை முடித்து வந்த துணை ஆணையர் தீபா சத்தியன், “விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விசாரணை முடிந்து வந்த ஹேம்நாத், அவரது தந்தை ரவிச்சந்திரனிடம், விசாரணை குறித்தும், சித்ரா இறப்பு குறித்தும் கேட்டபோது பதில் அளிக்க மறுத்து விட்டு நடந்து சென்றார்.
4ஆவது நாளாக இன்றும்(டிச. 12) சித்ரா வழக்கில் விசாரணை தொடரும்! இந்த நிலையில், நான்காவது நாளாக இன்றும் (டிச. 12) ஹேம்நாத்திடம் தொடர்ந்து விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். ஹேம்நாத் தாயார், சித்ராவின் தாயார் ஆகியோர் வயதானவர்கள் என்பதால் அவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை செய்ய காவல் துறையினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க...வேலூரை கலங்கடித்த 'பிரியாணி' கொலை!