விசாகப்பட்டினம் (ஆந்திர பிரதேசம்): எல்.ஜி பாலிமர்ஸ் ரசாயன நிறுவனத்தின் அலட்சிய போக்கால் 15 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதலைமை நிர்வாக அலுவலர் சுங்கே ஜியோங், இயக்குநர் டி.எஸ்.கிம், கூடுதல் இயக்குநர் பிபி. மோகன் உள்பட 12 பேருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் மே மாதம் 7ஆம் தேதி அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது.
விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
தொழிற்சாலையை சுற்றியுள்ள 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்களை விஷ வாயு சூழந்தது. இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் விஷ வாயுயை சுவாசித்ததால் மயங்கி விழுந்தனர்.