புதுச்சேரி:ரம்மி விளையாட்டில் பணம் இழந்தவரின் சோக முடிவு குறித்து, தனது மனைவிக்கு அனுப்பிய ஒலிப்பதிவு வெளியானது.
புதுச்சேரி கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (39). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் ரீ-சார்ஜ் செய்யும் கடை நடத்திவந்தார். இவர் நேற்று (அக்.18) காலை நத்தமேடு ஏரிக்கரையில் பாதி உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததார்.
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், இணையதளம் மூலம் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்டிருந்த விஜயகுமார், ரம்மி விளையாட்டில் நிறைய பணத்தை இழந்ததாக தெரிகிறது. இதில் விரக்தியடைந்து, நத்தமேடு ஏரிக்கரையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
80 வீடுகளை குத்தகைக்கு எடுத்து ஏமாற்றிய தம்பதி
இச்சூழலில், விஜயகுமார் தனது மனைவி மதுமிதா கைப்பேசிக்கு அனுப்பியுள்ள ஒலிப்பதிவில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “எனது பைக் இருக்கும் இடத்திற்கு அருகில் என் பிணம் இருக்கும். எனது மொபைல் போன் பைக் டேங்க் கவரில் உள்ளது. நீ உங்க அம்மா வீட்டுக்குப் போனால் என்னை மறந்துவிடுவாய். நீ நல்லா இரு. உங்கிட்ட மட்டும் தான் பேசணும்னு தோணுச்சு. ஐ லவ் யூ” என்று உருக்கமுடன் இருந்தது.
ரம்மி விளையாடி பணம் இழந்தவரின் கடைசி ஒலிப்பதிவு மேலும், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல், இணைய சூதாட்டத்தை தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல், ரம்மி சூதாட்டத்தில் 30 லட்சத்துக்கு மேல் இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது மனைவியிடம் அந்த ஒலிப்பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த செய்தி சுற்றுவட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.