விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (46). இவர் கச்சராபாளையம் காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமைக் காவலராக பணிபுரிந்துவந்தார்.
தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்!- விழுப்புரம் காவல்நிலையத்தில் சோகம் - Viluppuram Police dies
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சராபாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
![தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்!- விழுப்புரம் காவல்நிலையத்தில் சோகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4475380-thumbnail-3x2-vpm.jpg)
தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்
தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்
இந்நிலையில் நேற்று இரவுப் பணியை முடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்தவுடன் சக காவலர்களிடம் மயக்கம் வருவதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து பாஸ்கரை சக காவலர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாஸ்கர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். பின்னர் பாஸ்கரின் சடலம் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டது.