விழுப்புரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் சித்தேரிகரை பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (45). கூலி தொழிலாளியான இவருக்கு கவிதா (35) என்ற மனைவியும் பவித்ரா (17), ஷர்மி (11) என்ற இரு மகள்களும் உள்ளனர். நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கோயிலுக்கு செல்வதாகக் கூறி தனது இரு மகள்களுடன் சென்றுள்ளார் கவிதா
ஆனால், அவர்கள் மூவரும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இச்சூழலில், இன்று அவர்கள் மூவரும் சித்தேரிக்கரை ரயில்வே கேட் அருகே கிடந்துள்ளனர். காலை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.