தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

இறந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி திருட்டு! - Chain theft from dead body

விழுப்புரம்: ஜிப்மர் மருத்துவமனையில் இறந்த பெண்ணின் சடலத்தில் இருந்த மூன்று பவுன் சவரன் தாலி செயினைப் பறித்து சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hospital
Hospital

By

Published : Sep 16, 2020, 2:43 PM IST

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா பிரம்மதேசம் வன்னியர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ஜெயா. இவர் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 13ஆம் தேதி விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்.14) காலை சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயா உடலை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
அப்போது ஜெயா அணிந்திருந்த பவுன் தாலிச் செயின் காணமல்போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர், பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது சரியான தகவல் அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து தாலிச் செயின் காணாமல்போனது தொடர்பாக ஜிப்மர் நிர்வாகத்திடமும் ஜெயா உறவினர்கள் முறையிட்டனர்.

ஆனால் ஜிப்மர் நிர்வாகமும் சரிவர பதில் அளிக்காததால், புதுச்சேரி கோரிமேடு தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இறந்தபோது பணியில் இருந்த ஊழியர்கள் தாலி செயினை அபகரித்தனரா? அல்லது நோயாளியைப் பார்க்க வந்த உறவினர்கள் யாரேனும் செயினைப் பறித்து சென்றனரா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details