தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சிறுமி கொலை - மாற்றுத்திறனாளி இளைஞர் கைது - villupuram latest news

விழுப்புரம்: சோழகனூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

villupuram girl murder issue
villupuram girl murder issue

By

Published : Sep 25, 2020, 8:22 PM IST

விழுப்புரம் அருகே சோழகனூர் கிராமத்தை சேர்ந்தவர் எம்ஜிஆர்பிரியன். இவரது மகள் பிரியதர்ஷினி (13). எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறையால் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று (செப்.25) காலை பிரியதர்ஷினியின் பெற்றோர் விவசாய வேலைக்கு சென்றுவிட்டனர். இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 16 வயது இளைஞர் ஒருவர் திடீரென பிரியதர்ஷினிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். பிரியதர்ஷினி கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து அவரது கழுத்து, முதுகு உள்ளிட்ட இடங்களில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரியதர்ஷினி, ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் பிரியதர்ஷினி வீட்டுக்கு வந்து பார்த்ததில் பிரியதர்ஷினி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து காணை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாற்றுத்திறனாளி இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details