பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். பால் விற்பனையாளரான இவரை திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் ஆலம்பாடிக்குச் செல்லும்போது இருசக்கர வாகனத்தை தள்ளி விட்டதாகத் தெரிகிறது.
இரு கிராமத்தினரிடையே மோதல்; 3 பேருக்கு அரிவாள் வெட்டு! - இரு கிராமத்தினரிடையே மோதல்
பெரம்பலூர்: இரு கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டதில், 3 பேர் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![இரு கிராமத்தினரிடையே மோதல்; 3 பேருக்கு அரிவாள் வெட்டு! village problem in perambaluur இரு கிராமத்தினரிடையே மோதல் 3 பேருக்கு அரிவாள் வெட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5526261-thumbnail-3x2-perambalur.jpg)
இது தொடர்பாக சிவலிங்கம் மகன் சிவராஜ், கிஷோர், ரகுவரன் ஆகியோர் திருப்பெயர் கிராமத்திற்குச் சென்று கிராம மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கிராமத்தினர் சிலர் மூவரையும் வெட்டியதில், காயமடைந்த அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தின் காரணமாக இரண்டு கிராமங்களிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.